இச்சம்பவம் இன்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்று நிலையில், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கயஸ் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்து திரும்பியவர்களே விபத்திற்குள்ளாகியுள்ளனர்.
விசுவமடு, தேராவில் பகுதியில் அதி ஆபத்தான வளைவுகள் காணப்படுகின்ற நிலையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இது குறித்த புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.