LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, March 5, 2020

கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்புவதற்கு ஆட்சேபனை இல்லை – நீதிமன்றம்!

பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட
கழிவு அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு ஆட்சேபனை இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்தோடு குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதியரசர்களான ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் நீதிபதி அர்ஜூன் ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பட்டது.

எனவே இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவை மீறாமல் சரியான விதிமுறைகளுடன் அதனை செயற்படுத்தி அதன் விளக்கத்தினை நீதிமன்றுக்கு அறியப்படுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

மேலும் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களின் உரிமையாளர் தமது நிறுவனம் என்பதால், உரிய விநியோக செயன்முறை இல்லாததன் காரணமாக அதனை மீள் ஏற்றுமதி செய்வதில் தமது நிறுவனத்துடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாக சிலோன் மெட்டல் ப்ரொசசிங் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

எனினும் மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பாக தமது நிறுவனத்திற்கு ஆட்சேபனை இல்லை என வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஹேலிஸ் ப்றீ ஸோன் நிறுவனம் நீதிமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7