 அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவின், 50 மாகாணங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவின், 50 மாகாணங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8700ஆக உயர்ந்துள்ளதுடன், 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றினால் முதல் உயிரிழப்பு பதிவானது. ஒரு மாதத்துக்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 100ஐத் எட்டியுள்ளது.
நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், பாடசாலை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணத்தை தவிர்க்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உணவகங்கள், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல மாகாணங்களில் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், முக கவசம், பரிசோதனை சாதனம் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் கூறியுள்ளனர். ஆனால், தேவையான இருப்பு வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
                  



 
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
