பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கனேடியர்கள் வைரஸ் பரவாமல் தடுக்க இரண்டு வாரங்கள் இராணுவத் தளத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று Global Affairs Canada தெரிவித்துள்ளது.
சிக்கித் தவிக்கும் கனடியர்களை சீனாவின் வுஹானில் இருந்து வெளியேற்றுவதற்காக, அரசாங்கம் ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து Global Affairs Canada வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விமானம் சீன அரசாங்கத்திடமிருந்து தேவையான அங்கீகாரத்தைப் பெற்றவுடன் வுஹானுக்குச் செல்வதற்கு முன் வியட்நாமின் ஹனோய் நகருக்குச் செல்லும்.
இந்த விமானம் பயணிகளை ட்ரெண்டன், ஒன்றாரியோ நகரில் உள்ள கனேடிய படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லும், அங்கு அவர்கள் 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள். திருப்பி அனுப்பப்படுவதில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் விமானக் குழுவினரும் தனிமைப்படுத்தப்படுவார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.