LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 21, 2020

புர்கினோ தீவிரவாத தாக்குதலுக்க சவுதி கண்டனம்!

புர்கினோ பசோவில் நடத்தப்பட்ட தீவிரவாத
தாக்குதலுக்கு சவுதி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினோ பசோவில் உள்ள யாஹா மாகாணத்தில் அண்மையில் தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தேவலாயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

‘தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். புர்கினோ பாசோ மக்கள் வன்முறை மற்றும் தீவிரவாதத்தை நிராகரிக்கிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கோடி அளவுக்கு மக்கள் தொகை கொண்ட புர்கினா பேசோ பிரான்ஸிடமிருந்து 1960-ம் ஆண்டு விடுதலை பெற்றது.

பிரான்ஸுடன் நல்ல நட்பில் இருந்து வரும் நிலையில் அண்மைக்காலமாக இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

புர்கினா பாசோ, அடிக்கடி ஜிகாதி தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றது.

2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சஹேல் பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாத வன்முறை பரவத் தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7