மரணங்களைத் தடுப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையிடுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆழ்துளை மரணங்கள் தொடர்பாக ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயதுக் குழந்தையான சுர்ஜித் பராமரிப்பின்றி திறந்த வெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இந்நிலையில், குழந்தையை மீட்பதற்கான 80 மணி நேரமாக மீட்பு பணிகளின் பின்னர் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
இதனையடுத்து ஆழ்துளைக் கிணறுகள் பராமரிப்பின்றி காண்படுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.