உள்ளேன் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
மல்வத்து அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கத்தில் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரையில் ஜனநாயகத்தை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளேன்.
சபாநாயகராக பதவியில் இருந்துகொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க முன்னெடுத்த போராட்டத்தையிட்டு திருப்தியடைகின்றேன்.
நெருக்கடி காலத்தில் மகாநாயக்க தேரர்களின் வழிநடத்தல்களுக்கு அமையவே பிரச்சினைகளை வெற்றிக்கொண்டுள்ளேன்.
சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து அரசாங்கத்தின் செலவில் புதிதாக எவ்வித வாகனங்களையும் கொள்வனவு செய்யவில்லை.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் இதர அரச வளங்களையே இன்றும் பயன்படுத்தி வருகின்றேன்.
அடுத்த ஐந்து வருட காலத்திற்கு நாட்டு மக்கள் அமைச்சர் என்று விளிக்க கூடியவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.