கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தரும் சீன நாட்டினர் உணவகங்களிலும் பல்வேறு இடங்களிலும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக முரண்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் மூன்று தசாப்த காலமாக நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது இலங்கையை ஆதரித்த நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதை மக்கள் நினைவில்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எல்லா நேரங்களிலும் சீனா இலங்கையை பொருளாதார ரீதியாக ஆதரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் உள்ள சீன சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.