வரும் நிலையல், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்துள்ள 1351பேர் 11 மருத்துவமனைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவர்களுக்கான கொரோனா வைரஸ் குறித்த விளக்க கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ கொரோனா வைரஸ் பாதிப்ப குறித்து சந்தேகப்படும் வகையில் இருந்த 34 பேரின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 21பேருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலவேம்பு கசாயத்தால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.