தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான இரண்டு நாள் விஜயம் குறித்து வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அமெரிக்க-இந்திய உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான நிலையை எட்டியுள்ளது. இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியா வியத்தகு நாடு அந்நாட்டு பிரதமா் நரேந்திர மோடி சிறந்த தலைவா். நல்லதொரு பண்பாளா். இந்தியாவில் எங்களுக்கு சிறப்பான விருந்தோம்பல் அளிக்கப்பட்டது. அதனை நாங்கள் மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டோம்.
இந்தியாவுடன் பல துறைகளில் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வா்த்தகம், முதலீடுகள் மூலம் அதிக பலன் கிடைக்க இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.