இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த 07 சிறைக் கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தையிட்டு சிறு குற்றங்கள் புரிந்தோர் மற்றும் குறைந்த காலங்களில் சிறை தண்டனை பெற்றுக் கொண்டோர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கும் நிகழ்வு மட்டு சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர தலைமையில் இடம்பெற்றது
இதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த 07 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் பிறிதொரு வழக்கிற்காக மீண்டும் சிறை வைக்கப்பட்டுளனர்.
இதேவேளை நாட்டிலுள்ள 30 சிறைச்சாலைகளில் உள்ள 516 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது