LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 21, 2020

அரசாங்கத்தின் சில திட்டங்களை அனுமதிக்கவே முடியாது- சஜித் திட்டவட்டம்

கடன்களை மீள் செலுத்துவதற்குச் சிரமப்படும்
நிலையில் மேலும் கடன் பெறும் திட்டங்களை அனுமதிக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கடன் பெறும் எல்லையை மேலும் அதிகரிக்கும் யோசனைக்கே எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை எதிர்க்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்திருந்த அவர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆளுங்கட்சியால் நாடாளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதி இடைக்காலக் கணக்கறிக்கை முன்வைக்கப்படவில்லை. யோசனையொன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த யோசனைத் திட்டத்தில் இரு பிரிவுகள் இருந்தன.

ஒன்று அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமானது. மற்றையது கடன் எல்லையை அதிகரிப்பது. இவ்விரண்டு பிரிவுகளிலும் கடன் எல்லையை அதிகரிக்கும் விடயத்துக்கே நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். அபிவிருத்தி நடவடிக்கை சம்பந்தமான யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, மக்கள் நலன்சார் அரசாங்கமாக இருந்திருந்தால் அபிவிருத்தி சம்பந்தமான யோசனையை முன்வைத்துவிட்டு மற்றையதை மீளப்பெற்றிருக்கும். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களோ இரண்டையும் மீளப் பெற்றுவிட்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்தார். அதன்போது கடன்களை மீள் செலுத்துவதற்கு மேலும் மூன்றாண்டுகள் அவகாசம் வேண்டுமென இந்தியாவிடம் கோரினார். நிலைமை இப்படியிருக்கையில் மேலும் கடன்களைப் பெறுவதற்கு எவ்வாறு அனுமதிக்க முடியும்? எனவேதான் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களிடம் இருந்து கிடைக்கும் சிறந்த ஆணையின் பிரகாரம் அரசியல் பழிவாங்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7