தம்பட்டை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா தவராசா என்பவரே இன்று (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவராத நிலையில் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.