LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 7, 2020

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் : பா.ஜ.க நிர்வாகிகளிடம் அமித்ஷா கோரிக்கை!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க நிர்வாகிகள் 
தொண்டர்கள் காலை 10 மணிக்குள் கட்டாயம் வாக்களித்து விட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பா.ஜ.க நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது,  “டெல்லி நாட்டின் தலைநகர் என்பதால் பல மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்,  நிர்வாகிகள்,  தொண்டர்கள் என பலரும் வசிக்கின்றனர்.

டெல்லியில் வாக்குரிமை உள்ள பா.ஜ.கவினர் அனைவரும் காலை 10 மணிக்குள் வாக்களிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவர்கள் வாக்குகள் கணிசமாக இருப்பதால் அது கட்சியின் வெற்றிக்கு மிக முக்கியமாகும்.

அதுபோலவே டெல்லியில் உள்ள 13,750 வாக்குச்சாவடிகளிலும் காலை 6 மணிக்கு பாஜக நிர்வாகிகள்,  பொறுப்பாளர்கள் வருகை தர வேண்டும். நமது வாக்காளர்களின் வாக்குகள் தவறாமல் பதிவாவதை பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு முடியும் வரை கண்ணும் கருத்துமாக இருந்து பா.ஜ.கவுக்கு அதிகமான வாக்குகளை பெற்று தர வேண்டும்” என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ்,  பா.ஜ.க,  ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே  மும்முனைப் போட்டி இருந்தாலும் பா.ஜ.க,  ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்து வருகிறது.

இந்நிலையில்,  தேர்தலுக்கு முந்தைய பல கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதன்படி   ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7