சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு தங்கியிருந்த 717 இலங்கையர்களை தற்போதைய நிலையில், இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.மேலும் 10 மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கை வரவுள்ளதாக அதன் பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் இதுவரை 425 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணத்தில் பரவியுள்ள நிலையில், சீனாவை தவிர மேலும் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





