1616 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமுலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. குடியேற்ற விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரே ஆண்டில் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளது தற்போது தான் எனவும் குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 359 பெண்கள் உள்ளிட்ட 9818 இந்தியர்கள் குடியேற்ற விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 611 பேர் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனவும், பஞ்சாப்பை சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகமாக அமெரிக்காவில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த பலர் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் குறித்த அறிவிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.