காணப்படும் பகுதிகளுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்று (புதன்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய காமினி திஸாநாயக்க போக்குவரத்துப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவியுயர்வு பெற்று சுபநேரமான இன்று காலை 10.1இற்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய அசோக பிரியந்த கடந்த மாதம் குருணாகல் பகுதிக்கு இடம்மாற்றம் பெற்றுச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.