இன நல்லிணக்க செயற்பாடு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானதுடன் தெற்கையும், வடக்கையும் இணைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் குறித்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த 24 அங்கத்தவர்கள் பூநகரிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இங்குள்ள மக்களின் அடிப்படை மற்றும் சமூக அரசியல் ரீதியான பிரச்சினைகளை சகோதர இனத்தவர்களிற்கு அறிய வைக்கும் வகையிலும், அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை இங்குள்ள மக்கள் அறிந்துகொண்டு தமக்குள்ளே புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும் குறித்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று கிளிநொச்சி பூநகரிக்கு சென்ற காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களை பூநகரி மக்கள் வரவேற்றனர். குறித்த நிகழ்வு பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து இரு தரப்பினரும் தத்தமது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றது. இரண்டு நாட்களைக் கொண்ட குறித்த நல்லிணக்க திட்டம் நாளை நிறைவடையவுள்ளது. வருகை தந்த சகோதர இனத்தவவர்களை பூநகரி மக்கள் இன்று இரவு தத்தமது வீடுகளில் தங்க வைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.