வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்கள் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அ.தி.மு.க. சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள வர்கள் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றியை சிந்தாமல், சிதறாமல் பெற்று, கட்சிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2 ஆம் திகதி அ.தி.மு.க.வின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுடைய வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்றுவிட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் முறைப்படி செய்யப்பட்டுள்ளதா, வாக்குப்பெட்டிகள், இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா, பதிவான வாக்குகள், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகள் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்” என கிறினர்.