
2019ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் முதல்தரம் கணித பிரிவில் தோற்றி முதல் நிலை பெற்ற மாணவனை தட்டுங்கள் இணைய செய்தித்தளம் பாராட்டி கௌரவித்தது.

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் ஜோர்ஜ் ஷெரோன் கிளறன்ஸ் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்திலும் மாகாணத்திலும் முதலிடத்தை பெற்றதுடன் தேசிய ரீதியில் 48வது நிலையினையும் பெற்றுள்ளார்.
தட்டுங்கள் செய்திதளத்தினர் வெள்ளிக்கிழமை 2020.01.17 கோணேஸ்வரா இந்துக்கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் பாராட்டு விழாவினை நடத்தினர்.

முதலிடம் பெற்ற ஷெரோனுக்கு ரூபா 50,000.00ம் கல்லூரிக்கு 10,000.00ம் வழங்கி வைத்தனர். தட்டுங்கள் செய்தித் தளம் சார்பில் மிருக வைத்தியர் திருமதி கீத்தா சத்தியசீலன் மாணவன் ஷெரோனுக்கும். தட்டுங்கள் டொட் கொம் ஆசிரியர் வி.மைக்கல் கொலின் அதிபர் செ.பத்மசீலனிடமும் காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இவ் வேளை உரையாற்றிய தட்டுங்கள் ஆசிரியர் "இன்று தொடங்கும் இந் நிகழ்வு வருடாவருடம் நடைபெறும் என்றார். இதன் மூலமாக தட்டுங்கள். கொம் திருமலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தட்டுங்கள். கொம் இயக்குனர்திரு. பேரம்பலம் சுதாகரன் இந்துக் கல்லூரி பழைய மாணவர் என்பதும் அவரது தந்தையின் ஞாபகர்த்தமாகவே பாடசாலைக்கான அன்பளிப்பு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
கல்லூரி உயர்தர மாணவர்கள், பிரதி அதிபர் திருமதி கெ.ராதாகிருஸ்ணன், விஞ்ஞான பிரிவு பகுதிதலைவர் திருமதி வ.விஜயராஜேந்திரன் , ஆசிரியர்கள், முதல்நிலை பெற்ற ஷெரோன் கிளறன்ஸ்ஸின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.