மரண தண்டனையை இரத்து செய்யக்கோரி வினய், முகேஷ் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களையே உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த குற்றவாளிகள் 4 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி, தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்ட வினய், முகேஷ் சிங் ஆகியோர் சட்டத்தரணி ஊடாக சீராய்வு மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.