ரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய வருன பிரியந்த லியனகே நாடாளுமன்ற உறுப்பினராக இன்று(வெள்ளிக்கிழமை) பதியேற்றுள்ளார்.
இன்று பிற்பகல் கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் முன்னிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தான் எதிர்கட்சியில் அமர்ந்து கொண்டு, சஜித் பிரேமதாஸவின் கரங்களை பலப்படுத்தவுள்ளதாக வருன பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார்.