ஜீவன்களின் காப்பகம்’ யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காப்பகம் அறக்கெடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனால் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். அரியாலை ஈச்சங்காடு பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மாநகர சபை உறுப்பினர் ம.மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கலந்துகொண்டார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி கலாநிதி க.சசிமாறன், யாழ். வலய முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் சி.மாணிக்கராசா, யாழ். மாநகர சபை உறுப்பினர் வை.கிருபாகரன் உட்பட மேலும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.