எரிமலை குமுறல்கள் ஏற்படும் (Taal) எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 8,000 குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்தோடு, எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 286 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின் லுசான் தீவில் அமைந்துள்ள டால் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் எரிமலையிலிருந்து லாவா குழம்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
எரிமலை சாம்பல் வீதிகளை மூடும் அபாயம் இருப்பதால், எரிமலையை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.