அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விளையாட்டு சம்மந்தமாக உருவாகி வரும் ‘சுமோ’ திரைப்படத்தில் சிவா பிசியாக நடித்து வருகிறார். ‘பெப்ரவரி 14’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.பி.ஹொசிமன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு பின் ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார். மேலும் விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோருடன் நிஜ சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோ என்பவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தோ-ஜப்பானிஸ் சார்ந்த சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமான ‘சுமோ’ திரைப்படத்தின் பாடல் காட்சிகள் ஜப்பானில் தொடர்ந்து 35 நாட்கள் நடத்தப்பட்டன.
இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் சிவாதான் என்பது குறிப்பிடத்தக்கது.