சம்பவங்கள் குறித்த காரசாரமான விவாதத்தில், எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பவர் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடையுள்ளன.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றுள் பிரதானமாக குடியுரிமை திருந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன.
அத்துடன் இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெற்று வந்தது.
இதன்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, “மேக் இன் இந்தியா”, என்பதை “ரேப் இன் இந்தியா” எனக்கூறிய விவகாரம் இன்றைய விவாதத்தில் பெரும் பங்கு வகித்தது.
ராகுல் காந்தியின் கருத்துக்கு மன்னிப்புகோர வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில், மக்களவையில் கடும் அமளி ஏற்பட நாடாளுமன்றம் பிற்பகல் ஒரு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.