பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரிக்கப் பார்க்கிறது என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியாவை காப்பாற்றுங்கள்’ என்ற தொனிப்பொருளில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டில் குழப்பமான தலைவர், குழப்பமான அரசு என்ற சூழல் இருப்பதாகவும், அனைவரும் ஒன்று சேர்ந்து, அனைவருக்காகவும் என்ற மத்திய அரசின் கொள்கையில் அனைவரும் என்பது எங்கிருக்கிறது என்று முழு தேசமும் கேட்கிறது.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு போராடும் என்றும் அது இந்தியாவின் ஆன்மாவை ‘துண்டிக்கிறது. அநீதியை அனுபவிப்பது மிகப்பெரிய குற்றம்.
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதற்காக நாம் கடுமையாக போராட வேண்டும்.
மோடி – ஷா அரசாங்கம் நாடாளுமன்றத்தைப் பற்றியோ அல்லது இதர நிறுவனங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை, உண்மையான பிரச்சினைகளை மறைத்து மக்களை போராட வைப்பதே அவர்களின் ஒரே கொள்கை எனத் தெரிவித்தார்.