LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 19, 2019

நாட்டின் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது – கமல்ஹாசன்

நாட்டின் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த மாணவர்களை கமல்ஹாசன் இன்று (புதன்கிழமை) சந்திக்கச் சென்ற போதும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்தனர். இதனால் வாசலில் இருந்தவாறு மாணவர்களிடம் அவர் உரையாடியதுடன் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “எனது நாடு, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளன. ஆகையால் நான் இங்கு வந்துள்ளேன். எனக்கு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

நான் இறக்கும்வரை, என்னை ஒரு மாணவன் என்றுதான் அழைத்துக் கொள்வேன். மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன்.

மத்திய அரசு மாணவர்களை படிக்கும் இடத்திலேயே அகதியாக்கியுள்ளது. போராடும் மாணவர்களுக்கு உணவு கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியமை இந்த அரசுக்கு அவமானம். குடியுரிமைச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7