நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்க கூடாது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், பெண்கள் பாதுகாப்பு என்பது ஒரு தீவிரமான பிரச்சினை. பெண்கள் மீதான கொடூரமான தாக்குதல் நாட்டின் மனசாட்சியையே உலுக்குகிறது.
கருணை மனுக்களை நாடாளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கவும் கூடாது எனத் தெரிவித்துள்ளார்