Toshimitsu Motegi இற்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் Toshimitsu Motegi ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.