LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 4, 2019

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வருகிறது கட்டுப்பாடு – ஆணைக்குழு அறிவிப்பு

பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் போதனை
சார் பணியாள் தொகுதியினர் எவரும் சட்டத்தரணிகளாகச் செயற்பட முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

போதனைசார் பணியாளர்கள் தமது வழக்கமான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அந்தந்த பல்கலைக்கழகங்களின் பேரவைவின் அனுமதியுடன் நொத்தாரிசுகளாக பணியாற்ற முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மெஹானட டி சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 10 / 2019 ஆம் இலக்க தாபனச் சுற்றறிக்கையின் மூலம் சகல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் அறிவித்திருக்கிறார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் அவதானங்களுக்கு அமைவாக 21.11.2013 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 885ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து, 05.09.2019இல் நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 1017 ஆவது கூட்டத்தில் இந்தத் தீர்மானம் உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7