மன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கானவரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மதிப்பீட்டு வரைவு கடந்த மாதம் 21 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் மன்னார் நகர சபையின் 22 ஆவது அமர்வு இன்று மாலை 2 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மதிப்பீடு தொடர்பாக இன்றையதினம் சபையில் கலந்தாலோசிக்கப்பட்ட நிலையில் வரைவு சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், சபையின் செயலாளர், கணக்காளர் மற்றும் மன்னார் நகர சபையின் அதிகாரிகள் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுவதாக மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.





