
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதிக மழை காரணமாக கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வீதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதனை அண்மித்த செல்வபுரம், பொன்னகர்,அறிவியல்நகர், இந்துபுரம் உள்ளிட்ட கிராமங்களின் சில பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.
பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் ஏ9் வீதிக்கு மேலாக வெள்ளம் கடந்தது. எனினும் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
அப்பகுதியை அண்மித்த பகுதிகளில் காணப்படும் உள்ளக வீதிகள் வெள்ளத்தால் மூழ்கி காணப்பட்டன. வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
