LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 11, 2019

மனித மேம்பாட்டு குறிக்காட்டியில் இலங்கை முன்னேற்றம்

மனித மேம்பாட்டு குறிக்காட்டியில்
இலங்கை 71ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஐந்து புள்ளிகளை பெற்று இந்த பட்டியலில் முன்னிலைபெற்றுள்ளது.

189 நாடுகளில் குழந்தை பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம், எதிர்பார்க்கப்படும் கல்வி, தனிநபர் வருமானம் ஆகியவற்றை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின்அபிவிருத்தி திட்டத்தினால் இந்த குறிக்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் 76 தசம் 8 ஆக காணப்படுவதோடு அது தெற்காசிய பிராந்தியத்தில் அதிகமான ஆயுட்காலமாகும்.

இந்த மனித அபிவிருத்தி குறிக்காட்டியில் நோர்வே முதலிடத்திலும் சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

அத்துடன், மாலைத்தீவு 104 ஆவது இடத்திலும் இந்தியா 129 ஆவது இடத்திலும் பூட்டான் 134 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 135 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 152 ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 170 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனவென்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7