(ஜெ.ஜெய்ஷிகன்)
கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செல்வன். காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் தட்டிக்; கொண்டார்.
சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் நடாத்தப்பட்ட குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 04.12.19 ஆம் திகதி நடைபெற்றது.கொழும்பு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்ட்டது.. அகில இலங்கை ரீதியில் வெற்றி பெற்ற முதல் மாணவன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.