
ஒன்றை 24,000 முறை அழைத்து முறைப்பாடுகளை மேற்கொண்ட 71 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகிடோஷி ஒகாடாமோ என்ற முதியவர் எட்டே நாட்களில் கே.டி.டி.ஐ என்னும் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் இலவச சேவை எண்ணை பல்லாயிரம் முறைக்கு மேலாக தொடர்பு கொண்டுள்ளார்.
இரண்டரை வருடங்களாக தொடர்ந்து அந்த முதியவர் தங்களை அழைத்ததாக அந்த நிறுவனம் உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தகவல் வௌியிட்டுள்ளது.
ஒகாடாமோ, தான் குறித்த நிறுவனத்திடம் தவறாக செயற்படவில்லை என்றும், தான் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கே.டி.டி.ஐ என்ற அந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மீறியதாக ஒகாடாமோ குற்றஞ்சாட்டியுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
டோக்கியோ மெட்ரோபொலிடன் பொலிஸார் “ஒகாடாமோ அந்த நிறுவனத்தை அழைத்து வாடிக்கையாளர் சேவையின் ஊழியரை தவறாக பேசுவார் அல்லது அந்த நிறுவனத்தின் பிரதிநிதி தன்னை சந்தித்து மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறுவார்,” என தெரிவித்துள்ளது.
சில நேரங்களில் அழைப்பை மேற்கொண்டு உடனடியாக துண்டிப்பதற்காகவே அவர் அந்த நிறுவனத்தை அழைப்பார் என்றும் கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில் இதுகுறித்து முறைப்பாடு எதனையும் மேற்கொள்ள தேவையில்லை என்று தாங்கள் நினைத்ததாகவும் ஆனால் அந்த முதியவர் அடிக்கடி அழைப்பதால் பிற வாடிக்கையாளர்களின் அழைப்பை ஏற்க முடியவில்லை என்றும் கே.டி.டி.ஐ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
அகிடோஷி என்ற குறித்த முதியவர் மீது ஒரு வர்த்தகத்தை `இயல்பாக இயங்கவிடாமல் தடுத்ததாக` குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
