LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 20, 2019

திரில்லர் கதையம்சத்தில் உருவாகும் ‘V1’ திரைப்படத்தின் டீசர்

நடிகர் பாவெல் நவகீதன் இயக்கத்தில் ‘V1’
திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இவர் இயக்கும் முதல் திரைப்படத்தின் இதுவாகும்.

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரோனி ரப்ஹெல் இசையில் இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க, முழுக்க விறுவிறுப்பாக இருக்கும் வகையில் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளை அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன்.

இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் பாவெல் நவகீதன் கூறுகையில், ”ஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம். அதிலும் சிலருக்கு அந்தக் கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம். இரத்தத்தை பார்த்தால் பயம் என்று பலருக்கு பல வகையான பயங்கள் இருக்கும். இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.

கதைப்படி கதாநாயகன் காவல் துறையில் வேலை பார்க்கும் ஒரு பொலிஸ் அதிகாரி ‘V1’ என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது.

அந்தக் கொலை பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயம் கதாநாயகனுக்கு. இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன், இந்தக் கொலைக்கான மர்மத்தையும், கொலைக்காரனையும் கண்டு பிடித்தாரா இல்லையா என்பதே இந்த படத்தின் கதையாகும்” எனக் கூறினார்.

டிசம்பர் 6 ஆம் திகதி வெளியாகவுள்ள இந்த திரைப்படம் முழுக், முழுக்க சென்னையிலேயே படமாக்கப்பட்டுள்ளது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7