LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 12, 2019

பெரும் குற்றம் புரிந்த எவரையும் விடுதலை செய்யப்போவதில்லை – சஜித்

பெரும் குற்றம் புரிந்த எவரையும்
விடுதலை செய்யப்போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘இளைஞர்கள் குழுவுடன் சஜித் பிரேமதாச’ என்ற தலைப்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றும் சேதமடைந்த தேவாலயங்கள் தொடர்பாக நான் மிகவும் கவலையடைகிறேன்.

அமைச்சர் என்ற வகையில், இந்த சம்பவத்தையிட்டு நான் இவ்வேளையில் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். தேசிய பாதுகாப்பு தொடர்பாக நாம் விசேட கவணம் செலுத்துவோம். நான் இதற்கு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

தீவிரவாதம், போதைப்பொருள் வர்த்தகம் போன்றவற்றை ஆரம்பித்து அதனை வளர்த்தவர்கள் மற்றும் கொலை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றுடன் தொடர்புடைய எவரையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியான பின்னர் நான் நடவடிக்கை எடுக்கமாட்டேன்.

ஒவ்வொருவரும் பல்வேறு விதமான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கலாம். எனினும் எனது நிலைப்பாட்டிலிருந்து நான் ஒருபோதும் விலகமாட்டேன்.

எமது நிர்வாகத்தில் அரச பயங்கரவாதத்திற்கு என்றும் இடமில்லை. மக்களுக்கு கருத்துரிமை வழங்கப்படும். அரசியல் உரிமை, மத உரிமை என அனைத்தும் அனைவருக்கும் வழங்கப்படும். நான் என்றும் இன்னொருவரது பேச்சைக் கேட்டு செயற்படாதவன் என்பதை மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்” என சஜித் பிரேமதாச கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7