LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 4, 2019

சானிச் பாடசாலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வர வாய்ப்பு!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி பகிஷ்கரிப்பில்
ஈடுபட்டுள்ள சானிச் பாடசாலை ஊழியர்களும், பாடசாலை மாவட்ட நிர்வாகமும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானித்துள்ளது.

ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சானிச் பாடசாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினால், 700இற்கும் மேற்பட்ட மாவணர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

இதனால் மாவணர்களின் நலன் கருதி, ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாடசாலை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கியூப் லோக்கல் 441 பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வி உதவியாளர்கள், பாதுகாவலர்கள், பஸ் ஓட்டுநர்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் என அனைவரும் கடந்த திங்கட் கிழமையிலிருந்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள், கிரேட்டர் விக்டோரியா மற்றும் சூக்கின் அண்டை மாவட்டங்களில் இருப்பதை விட சானிச் பாடசாலையில் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், ஊதிய சமநிலை பேணப்பட வேண்டுமெனவும் கோரி இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஊதிய சமத்துவம் ஒரு கவலையான விடயம் என தெரிவித்துள்ள பாடசாலை மாவட்ட நிர்வாகம், பொதுத்துறை ஊதிய உயர்வை ஆண்டுக்கு இரண்டு சதவீதமாக கட்டுப்படுத்தும் ஒரு மாகாண கட்டமைப்பு இதுவென்பதாலேயே குறித்த பிரச்சினை எழுந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சானிச் கல்வி சபையின் துணைத் தலைவர் எல்ஸி மெக்மர்பி கூறுகையில், இரு தரப்பினரும் அந்த வேறுபாடுகளைச் சரிசெய்ய முடியும். இந்த சந்திப்பு ஏற்கனவே இருக்கும் சில தவறான புரிதல்களை தெளிவுபடுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7