
தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நில வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதித்தது. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு ஜமாயத் உலேமா ஹிந்த் ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் மேலும் 4 பேர் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஹாஜி மஹபூப், ஹாஜி ஆசாத், ஹபீஸ் ரிஸ்வான், மவுலானா ஹிஸ்புல்லா ஆகிய 4 பேரும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவை ஏற்று தாங்களும் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
