கொண்ட பென்குயின் இரண்டு வாரங்கள் தீவிரமான பிரச்சாரத்திற்குப் பின்னர் நியூசிலாந்தின் விரும்பத்தக்க பறவைக்கான வருடாந்த போட்டியில் வெற்றி கொண்டுள்ளது.
ஐந்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்களைக் கொண்ட இந்த நிகழ்வில், ஹொய்ஹோ தனது 14 ஆண்டுகால வரலாற்றில் இந்த கௌரவத்தை பெற்றுள்ள முதல் பென்குயின் ஆகும்.
நியுஸிலாந்தில் தற்போது இந்த வகையான 225 பென்குவின்களே வாழ்ந்து வருவதுடன், ஹொய்ஹோ உலகிலேயே மிகவும் அரியவகையான பென்குவினாக கருதப்படுகின்றது.
இதுபற்றி விலங்கு வல்லுனர்கள் கூறுகையில், ஹொய்ஹோ ஒரு சமூக விரோத பறவை எனவும், இது ஒரு உயர்ந்த அலறலுடன் மற்ற பறவைகளை தொடர்பு கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சமூகவலைத்தள பயனர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கிடைக்கப் பெற்ற 43,460 வாக்குகளில் 12,022 விருப்பு வாக்குகளை குறித்த அரிய பென்குவின் பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.