
பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு ஒன்றிணைந்து ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முன்வருமாறு மாத்தறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
அவர் கூறுகையில், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும். அதனால் இந்த தேர்தலில் போட்டியிருப்பது சஜித் பிரேமதாசவுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்குமே. ஏனையவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகளால் பிரதான வேட்பாளர்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது.
குறிப்பாக அநுரகுமார திசாநாயக்க, மஹேஷ் சேனநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவைப் போன்று இந்நாட்டை நேசிப்பவர்கள். நாட்டை ஊழல் மோசடிகளில் இருந்து பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமான, சிறந்ததொரு நாட்டை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள்.
ஆனால் எமது எதிர்த் தரப்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயங்கள் அனைத்துக்கும் முரணானவர். பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர். இப்படிப்பட்டவரால் நாட்டைக் கொண்டுசெல்ல முடியாது.
நாட்டை குடும்ப ஆட்சியில் இருந்து பாதுகாக்கவும் மோசடிகளில் இருந்து பாதுகாக்கவும் சஜித் பிரேமதாச வெற்றிபெறவேண்டும். அதற்காக அநுரகுமார திசாநாயக்க சஜித் பிரேமதாசவுடன் இணைந்து நாட்டை பாதுகாக்க முன்வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.
