பல்கலைக்கழகத்தில், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
கல்விக் கட்டண உயர்வு, ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகம் முன்பாக திரண்ட ஏராளமான மாணவர்கள், பொலிஸார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டிச் செல்ல முயற்சித்ததாகவும் இதனால் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவிசாய்க்க வேண்டும் எனவும் மாணவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.