கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக, பொலிஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.
எஸ்.யூ.வி. ரக வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட 32 வயதுப் பெண்ணின் மரணம் தொடர்பாக, ஆரம்பத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தாலும், தற்போது குறித்த பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியது அல்ல என்று கருதப்படுகிறது.
நொவெம்பர் 12ஆம் திகதி மாலை 4:20 மணியளவில், ஜன்னல்களில் கருப்பு நிற ஸ்ரிக்கர் ஓட்டிய பழுப்பு நிற எஸ்யூவியில் இருந்து லவோனா டோபர் என்ற பெண்ணின் உடல், கண்டெடுக்கப்பட்டது.
இவரது உடலை டோபரின் குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளதுடன், நொவெம்பர் 7 முதல் டோபர் எஸ்யூவி வாகனத்தில் இருந்ததாக நம்பப்படுகின்றது.
குறித்த பெண்ணின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பான தகவல் எதனையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.