
அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு பிரிவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இதனால் டெங்கு நோயினை ஏற்படுத்தும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
