எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இல்லத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு தேனீர் விருந்து உபசாரத்தில் பங்கு கொண்டதுடன் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அங்கஜன் இராமநாதனிடம் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து கரடிப் போக்கு சந்தியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் கிளிநொச்சி மாவட்ட புத்தி ஜீவிகள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்த மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இன்று முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது