துணைத் தலைவரான மூ சோச்சுவா கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று(வியாழக்கிழமை) மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாளைய தினம் கம்போடியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையிலேயே, இவர் கைது செய்ப்பட்டுள்ளார்.
நாளைய தினம் கம்போடியாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த மூ சோச்சுவா திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இவர் கம்போடியாவின் தடை செய்யப்பட்ட எதிர்க்கட்சியான தேசிய மீட்புக் கட்சியின் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது