ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என தொழிலதிபர் நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை மூலம் 13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிரவ்மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதற்கிடையே, நிரவ் மோடி சார்பில் மீண்டும் புதிதாக பிணைமனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனுவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
குறித்த மனுவில் மேலும் தெரிவித்த அவர், தான் சிறை கைதிகளால் மூன்று முறை தாக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் முறைப்பாடளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் தான் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் நிரவ் மோடி குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிணை வழங்க இருமடங்கு பிணைத்தொகை அளிக்க தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்த கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.