
இன்று இரண்டாவது நாளாகவும் காற்று மாசு குறைவடைந்துள்ளது.
டெல்லியின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, இன்று காலை காற்று மாசின் அளவு சராசரியாக 97 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
இது காற்றின் தர குறியீட்டில், திருப்திகரமானது என தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வப்போது பெய்யும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை மற்றும், சாதகமான காற்று ஆகியனவற்றால், டெல்லியில் காற்று மாசு, தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆய்வு மையம் இதனைத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
