தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்ய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி இரத்மலானை பிரதேசத்தில் வீடொன்றின் அறையினுள் 35 வயதுடைய பெண்ணையும் 3 வயது மகன் மற்றும் ஒரு வயதுடைய குழந்தையொன்றையும் எரித்து கொலை செய்ததாக குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து குறித்த நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டில் குறித்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி இன்று (வியாழக்கிழமை) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
மரணதன்டனை விதிக்கப்பட்ட நபர், ஆசிரியரான மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளான 3 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தை ஆகியோரை கழுத்து நெரித்ததன் பின்னர், அறைக்குள் வைத்து தீ மூட்டி கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.